டாக்டர் பயல் தற்கொலை வழக்கு: மேலும் 2 டாக்டர்கள் கைது


டாக்டர் பயல் தற்கொலை வழக்கு: மேலும் 2 டாக்டர்கள் கைது
x
தினத்தந்தி 30 May 2019 3:30 AM IST (Updated: 30 May 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர் பயல் தற்கொலை வழக்கில் மேலும் 2 டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

மும்பை, 

டாக்டர் பயல் தற்கொலை வழக்கில் மேலும் 2 டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

டாக்டர் தற்கொலை வழக்கு

மும்பை நாயர் ஆஸ்பத்திரியில் 2-ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்து வந்தவர் டாக்டர் பயல்(வயது26). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவ கல்லூரி விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அக்ரிபாடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதில், பழங்குடியினத்தை சேர்ந்த டாக்டர் பயலை அவருடன் மருத்துவ மேல்படிப்பு படித்து வரும் ஹேமா, பக்தி, அங்கிதா ஆகியோர் சாதி ரீதியாக துன்புறுத்தி வந்ததும், இதனால் மனமுடைந்து மாணவி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 3 டாக்டர்கள் மீதும் மாணவியை தற்கொலைக்கு தூண்டியது மற்றும் வன்கொடுமை தடுப்புசட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் 2 பேர் கைது

இதையடுத்து, டாக்டர்கள் 3 பேரும் தலைமறைவானார்கள். இந்த நிலையில், டாக்டர் பயல் தற்கொலைக்கு காரணமான டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் நாயர் ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, டாக்டர் பக்தி நேற்று முன்தினம் மாலை அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதேபோல கோர்ட்டில் முன்ஜாமீன் கோரியிருந்த மற்ற 2 டாக்டர்களும் நேற்று கைது செய்யப்பட்டனர். பின்னர் 3 பேரையும் போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். கோர்ட்டு அவர்களை நாளை(வெள்ளிக்கிழமை) வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

Next Story