திருவானைக்காவல் மேம்பால பணிகளை வருகிற 10-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
திருவானைக்காவல் மேம்பால பணிகளை வருகிற 10-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று ஆய்வுக்கு பின் அதிகாரிகளுக்கு கலெக்டர் சிவராசு உத்தரவிட்டார்.
திருச்சி,
திருச்சி- ஸ்ரீரங்கம் இடையே திருவானைக்காவல் ரெயில்வே மேம்பாலம் குறுகலாகவும், மிகவும் பழமையடைந்தும் இருந்ததால் அதனை அகற்றி விட்டு புதிதாக பாலம் கட்டும் பணி தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந்தேதி தொடங்கப்பட்டது. நிலமதிப்பீடு உள்பட ரூ.125 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் இந்த மேம்பாலம் மற்றும் சாலை பணிகள் 2018-ம் ஆண்டிற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டிருக்கவேண்டும். ஆனால் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் போன்ற காரணங்களால் கட்டுமான பணி இன்னும் முழுமையடைய வில்லை.
இந்த பாலத்தின் மொத்த நீளம் 1430 மீட்டர் ஆகும். பாலத்தின் மொத்த அகலம் 17.20 மீட்டர். பாலப்பகுதி மட்டும் 907.76 மீட்டரில் அமைந்து உள்ளது. பாலம் அமைப்பதற்கு 48 தூண்கள் அமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இப்பாலம் சென்னை- திருச்சி சாலையில் நான்கு வழித்தடமாகவும் கல்லணை மார்க்கத்தில் மூன்று வழித்தட இணைப்பு பாலமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலப்பணி சென்னை கரம், திருச்சி கரம் மற்றும் கல்லணை கரம் ஆகிய மூன்று கரங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேம்பாலத்துடன் சென்னை, திருச்சி, கல்லணை பக்க சாலைகளை இணைக்கும் அணுகுசாலை பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ். சிவராசு நேற்று திருவானைக்காவல் சென்று பாலம் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து மழைநீர் வடிகால் மற்றும் தாங்குத்தூண்கள் பாதுகாப்புச் சுவர் அமைக்கும் பணி ஆகிய பணிகள் தனித்தனியாக செய்து முடிக்கப்பட வேண்டும். பணிகள் அனைத்தும் தரமானதாக இருக்க வேண்டும். இப்பணிகள் அனைத்தும் ஜூன் 10-ந் தேதிக்குள் முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் சிவராசு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் நாகராஜன், உதவி கோட்டப்பொறியாளர் மீனாட்சி, உதவி பொறியாளர் ஜனனி, தாசில்தார் கனகமாணிக்கம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story