தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய 5 பேர் கைது


தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 30 May 2019 3:45 AM IST (Updated: 30 May 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

புதுவை தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, 

புதுவை முதலியார்பேட்டையை சேர்ந்தவர் முருகன். தொழிலதிபரான இவர் கவுண்டன்பாளையம் நவசக்தி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டிட பணி நடந்த இடத்துக்கு 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் பிரபல ரவுடி ஒருவரின் பெயரைகூறி பணம் கொடுக்குமாறு மிரட்டினார்கள். அவர்கள் ரூ.10 லட்சம் வரை கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் முருகன் பணத்தை கொடுக்கவில்லை.

இந்தநிலையில் சம்பவத்தன்று ஆட்டோவில் மீண்டும் ஒரு கும்பல் அங்கு வந்துள்ளது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்ட அந்த கும்பல் முருகனிடம் பணம் கேட்டு மிரட்டியது. ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக அவர் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் பணம் கேட்டு மிரட்டியது பூமியான்பேட்டை பாவாணர் நகரை சேர்ந்த விஜயகுமார் (25), பிச்சவீரன்பேட்டை சேர்ந்த ராஜ்மோகன் (23), முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகரை சேர்ந்த லோகநாதன் (43), பூமியான்பேட்டை ஜான்சி நகரை சேர்ந்த ரமேஷ் (48), உழவர்கரையை சேர்ந்த மோகன் (39) மற்றும் சிலர் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த மிரட்டலில் 10 பேர் வரை ஈடுபட்டிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story