உருளையன்பேட்டை போலீஸ்நிலையம் முன்பு நள்ளிரவில் பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
புதுவை உருளையன்பேட்டை போலீஸ்நிலையம் முன்பு நள்ளிரவில் பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுவை உருளையன்பேட்டை மார்க்கெட் வீதியை சேர்ந்தவர் ரெமோ. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் காரணமாக தகராறு இருந்து வந்தது.
இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டது. அப்போது வினோத் தாக்கப்பட்டு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்களை சிலர் விலக்கிவிட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து ரெமோ உள்ளிட்ட சிலர் தன்னை தாக்கியதாக வினோத் உருளையன்பேட்டை போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சூசை என்பவரை போலீசார் விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர்.
தகராறை அவர் விலக்கிவிட்டதாகவும், அவரை போலீசார் பிடித்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரது உறவு பெண்களான பெண்ணரசி, மஞ்சு, ரம்யா ஆகியோர் உருளையன்பேட்டை காவல்நிலையத்துக்கு வந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் அவர்கள் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசாரும், உறவினர்களும் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் விரைந்து வந்து அவரது உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Related Tags :
Next Story