காஞ்சீபுரத்தில் பயங்கரம் சிறுவன் அடித்துக்கொலை


காஞ்சீபுரத்தில் பயங்கரம் சிறுவன் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 30 May 2019 3:30 AM IST (Updated: 30 May 2019 3:28 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் சிறுவன் அடித்துக்கொலை செய்யப்பட்டான். பிணத்தை குளத்தில் வீசி சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் அடுத்த சிட்டியம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் முனுசாமி. இவரது மகன் நவீன்குமார் (வயது 15). காஞ்சீபுரம் உப்பேரிகுளத்தில் தலை, கால் ஆகிய இடங்களில் காயங்களுடன் சிறுவன் இறந்து கிடந்தான்.

எனவே சிறுவனை மர்மநபர்கள் அடித்துக்கொலை செய்து குளத்தில் வீசி சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நவீன்குமாரை யார் கொலை செய்தார்கள்?, எதற்காக கொலை செய்தார்கள்? நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் கொலை செய்யப்பட்டாரா? என்று காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன் உத்தரவின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

Next Story