செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது


செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது
x
தினத்தந்தி 31 May 2019 3:45 AM IST (Updated: 30 May 2019 11:11 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூர் தாலுகா அலுவலகத்தில் மதுராந்தகம் ஆர்.டி.ஓ. மாலதி தலைமையில் வட்டாட்சியர் செந்தில்குமார் முன்னிலையில் ஜமாபந்தி தொடங்கியது.

மதுராந்தகம்,

இதில் புதிய குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, முதியோர், விதவை உதவித்தொகை என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 141 மனுக்கள் பெறப்பட்டு 25 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் 16 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 102 மனுக்கள் நிலுவையில் உள்ளன.

இதில் ஆர்.டி.ஓ. வின் நேர்முக உதவியாளர் வேல்முருகன், தனி வட்டாட்சியர் செல்வசீலன், மண்டல துணை வட்டாட்சியர் சக்திவேல், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ராஜா, தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் புட்டியப்பன், தலைமையிடத்து நிலஅளவையர் லோகநாதன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Next Story