தர்மபுரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பரவலாக மழை


தர்மபுரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பரவலாக மழை
x
தினத்தந்தி 31 May 2019 4:30 AM IST (Updated: 30 May 2019 11:58 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் நேற்று பரவலாக மழை பெய்தது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென கருமேகங்கள் திரண்டன. இதைத்தொடர்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்தது. பல இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. புலிக்கரை பகுதியில் அரசு பஸ் மீது மரக்கிளை விழுந்தது. அதிர்‌‌ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சில இடங்களில் மின்கம்பங்களும் சேதமடைந்தன.

இதனிடையே நேற்று அதிகாலை வரை தர்மபுரி, ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக ஒகேனக்கல்லில் 15 மி.மீ. மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 37.02 மி.மீ. மழை பெய்தது. சராசரி மழையளவு 5.31 மி.மீ. ஆகும். பகுதிவாரியாக பெய்த மழை விவரம் (மி.மீட்டரில்) வருமாறு:- தர்மபுரி-8, பாலக்கோடு-9.2 பென்னாகரம்-1, அரூர்-4.

இந்தநிலையில் நேற்று மாலை தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் தர்மபுரி நகரில் விளம்பர போர்டு சரிந்து அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது விழுந்ததால் தர்மபுரி நகரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

Next Story