சுரண்டையில் விஷம் குடித்த இளம்பெண் சாவு தற்கொலைக்கு தூண்டியதாக கணவர்-மாமியார் கைது


சுரண்டையில் விஷம் குடித்த இளம்பெண் சாவு தற்கொலைக்கு தூண்டியதாக கணவர்-மாமியார் கைது
x
தினத்தந்தி 31 May 2019 3:00 AM IST (Updated: 31 May 2019 12:09 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டையில் விஷம் குடித்த இளம்பெண் உயிரிழந்தார். தற்கொலைக்கு தூண்டியதாக கணவர்-மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

சுரண்டை, 

சுரண்டையில் விஷம் குடித்த இளம்பெண் உயிரிழந்தார். தற்கொலைக்கு தூண்டியதாக கணவர்-மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

கூலி தொழிலாளி

நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவர் செண்பகம் மகன் மணிகண்டன் (வயது 32) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சந்தியா (29). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மணிகண்டன் சரியாக வேலைக்கு செல்லாமல், அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு, மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தியா தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து, கீழச்சுரண்டை தெற்கு தெருவில் உள்ள தன்னுடைய பெற்றோரின் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று விட்டார்.

விஷம் குடித்து...

இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி மணிகண்டன் தன்னுடைய மாமனாரின் வீட்டுக்கு சென்று, சந்தியாவை குடும்பம் நடத்த வருமாறு அழைத்து தகராறு செய்தார். இதனால் மனமுடைந்த சந்தியா விஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.

உடனே அவருக்கு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார்.

கணவர்-மாமியார் கைது

இதுகுறித்த புகாரின்பேரில், சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தியாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் மணிகண்டன், மாமியார் மாரியம்மாள் (55) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story