உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்ய அலுவலர்களுக்கு பயிற்சி


உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்ய அலுவலர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 31 May 2019 3:45 AM IST (Updated: 31 May 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்ய அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.

கிரு‌‌ஷ்ணகிரி, 

உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல்களை (சட்டமன்ற வாக்காளர் பட்டியலின்படி) தயார் செய்யவும், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான பயிற்சி வகுப்பு கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) லட்சுமணன், நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) ஸ்டீபன் ஜெயசந்திரா, கண்காணிப்பாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலையில் இந்த பயிற்சி வகுப்பு நடந்தது.

இதில் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு வாரியான வாக்காளர் பட்டியல்களை (சட்டமன்ற வாக்காளர் பட்டியலின்படி) தயார் செய்யவும், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு தேசிய தகவலியல் மைய அலுவலர்களால் காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர் மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி மைய நிலையத்தில் நடந்த பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்ற முதன்மை பயிற்றுனர்கள் முருகேசன், தளி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தோ‌‌ஷ்குமார் மூலமாக இந்த பயிற்சி நடத்தப்பட்டது.

இதில் மாவட்ட அளவில் அனைத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்து தேர்தல் உதவியாளர்கள், அனைத்து கணினி இயக்குபவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story