விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஆத்தூர் குளத்தை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஆத்தூர் குளத்தை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
ஆறுமுகநேரி,
விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஆத்தூர் குளத்தை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
ஆத்தூர் குளம்
ஆத்தூர் குளத்தின் பரப்பளவு 547 ஏக்கர் ஆகும். இதன் ஆழம் 14 அடி. இந்த குளத்தில் மொத்தம் 14 மடைகள் உள்ளன. இந்த மடைகள் வழியாக குளத்தில் உள்ள நீர், ஆத்தூர், தெற்கு ஆத்தூர், செல்வன்புதியனூர், சேர்ந்தப்பூமங்கலம், குமாரபண்ணையூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 2 ஆயிரத்து 220 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலத்திற்கு பாசனத்திற்கான திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீரை நம்பி தான் விவசாயிகள் வாழை, வெற்றிலை, நெல் போன்ற பயிர்களை பயிர் செய்து வருகின்றனர். இந்த குளம் தூர்வாரி சுமார் 60 ஆண்டுகள் ஆகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த குளம் தற்போது தூர்வாரப்படாமல் மண்மேடாக மாறி திட்டு திட்டாக காட்சி அளிக்கிறது.
தூர்வார வேண்டும்
இந்த குளம் ஒருமுறை பெருகினால் 2 போகம் விவசாயம் செய்த காலம் போய், தற்போது ஒரு போக நெல் விளையவே முடியாத நிலை ஏற்பட்டு விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். மேலும் இந்த குளத்தில் அதிக அளவில் காட்டு செடிகள் வளர்ந்து இருக்கிறது. குளத்தில்தேங்கும் சிறிதளவு தண்ணீரையும் அந்த செடிகள் உறிஞ்சுகின்றன. இதே போல் அமலை செடிகளும் அடர்ந்து வளர்ந்து காணப்படுகின்றன.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்றால், இந்த குளத்தை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும். கோடை காலம் குளத்தை தூர்வார சரியான நேரமாகும். எனவே உடனடியாக இந்த குளத்தை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும்.
விவசாயிகள் கோரிக்கை
அதே போல் இந்த குளத்திற்கு கடம்பாகுளத்தில் இருந்து வரும் தண்ணீர் சரியாக வந்து சேர வசதியாக அந்த நீர்வரத்து கால்வாய்களையும் சீரமைக்க வேண்டும். சில இடங்களில் முறைகேடாக மின்மோட்டார்கள் அமைத்து தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. அதனை தடுக்க வேண்டும். நீர்வரத்து கால்வாய்களில் சிமெண்டு தளம் போட்டு தண்ணீர் சீரான குளத்திற்கு வரும்படி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.
Related Tags :
Next Story