திசையன்விளை பகுதியில் ஞானதிரவியம் எம்.பி. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்
திசையன்விளை பகுதியில் ஞானதிரவியம் எம்.பி. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
திசையன்விளை,
திசையன்விளை பகுதியில் ஞானதிரவியம் எம்.பி. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
வாக்காளர்களுக்கு நன்றி
நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஞானதிரவியம் எம்.பி. நேற்று மாலையில் திசையன்விளைக்கு வந்தார். அவர் அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர், திறந்த ஜீப்பில் அப்பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். முன்னதாக அவர், வாழைத்தோட்டம், குமாரபுரம், அந்தோணியார்புரம், சுவிசேஷபுரம், மகாதேவன்குளம், சண்முகபுரம், கீரைக்காரன்தட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கும் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
குடிநீர் தட்டுப்பாடு
அப்போது ஞானதிரவியம் எம்.பி. பேசுகையில், தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி, திசையன்விளை பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வேன் என்று கூறினார்.
அவருடன் தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் பெல்சி, நகர செயலாளர் டிம்பர் செல்வராஜ், ஒன்றிய பொறுப்பாளர் ஜெகதீஷ், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் விஜய பெருமாள், நகர தலைவர் ராஜன் உள்பட பலர் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story