சிமெண்டு சிலாப் உடைந்து கிணற்றில் விழுந்த கல்லூரி மாணவர் சாவு


சிமெண்டு சிலாப் உடைந்து கிணற்றில் விழுந்த கல்லூரி மாணவர் சாவு
x
தினத்தந்தி 30 May 2019 11:00 PM GMT (Updated: 30 May 2019 7:49 PM GMT)

சிமெண்டு சிலாப் உடைந்து கிணற் றில் விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

அரியலூர்,

அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள புதுமார்க்கெட் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் வெங்கடேசன்(வயது 20). இவர் அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரது வீட்டில் உள்ளவர்கள் கடைகளி லிருந்து கொடுக்கப்படும் பூக்களை கட்டி கொடுக்கும் வேலை செய்து வருகிறார்கள். மேலும் பூக்களை விற்பனை செய்தும் வருகிறார்கள். நேற்று காலை வெங்கடேசன் எதிரே உள்ள மாடி வீட்டில் பூக்களை கொடுத்துவிட்டு திரும்புகையில், வீட்டின் நடைபாதையில் சிமெண்டு சிலாப் கொண்டு மூடப்பட்டிருந்த கிணற்றின் மீது நடந்தபோது எதிர்பாராத விதமாக சிமெண்டு சிலாப் உடைந்து 60 அடி ஆழ கிணற்றின் உள்ளே விழுந்தார். தகவலறிந்து வந்த அரியலூர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் வெங்கடேசனை பிணமாக மீட்டனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து அவரது உடலை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் நேரில் பார்வையிட்டார். வெங்கடேசன் கல்லூரியில் படித்துக்கொண்டே தனது குடும்ப சூழல் காரணமாக பூ வியாபாரம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. இறந்த வெங்கடேசனின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறியது காண்போரை கண்கலங்க செய்தது. 

Next Story