உலக புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் மற்றும் புதுக்கோட்டை அரசு தொழிற் பயிற்சி நிலைய நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், உலக புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
புதுக்கோட்டை,
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் மற்றும் புதுக்கோட்டை அரசு தொழிற் பயிற்சி நிலைய நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், உலக புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு அரசு தொழிற்பயிற்சி முதல்வர் ராமர் தலைமை தாங்கினார். அரசு தொழிற்பயிற்சி நிலைய மேலாண்மை குழு உறுப்பினர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். இதில் நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தமிழரசன் கலந்து கொண்டு பேசுகையில், சிகரெட் உபயோகம் செய்பவர்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதுடன், இளைய சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும். புகைபிடிப்பதை நிறுத்துவதை விட தடுப்பது எளிதானது. ஒவ்வொரு சிகரெட்டிலும் குறைந்தபட்சம் ஆறாயிரத்திற்கும் அதிகமான உடல் நலத்திற்கு கெடுதல் விளைவிக்கக் கூடிய ரசாயனங்களால் தயாரிக்கப்படுகிறது. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 3 சிகரெட் வீதம் ஒரு ஆண்டிற்கு புகைபிடித்தால் சராசரி மனிதனுடைய ஆயுட்காலத்தில் 10 ஆண்டுகள் குறையும். மேலும் ஒருவர் புகைப்பிடிப்பதால் அவருக்கு வரக்கூடிய பாதிப்புகளை விட அவருக்கு அருகில் உள்ளவர்களுக்கு பாதிப்பு அதிகம். ஏனென்றால் ஒவ்வொரு சிகரெட்டின் வாய்ப்பகுதியில் பில்டர் என்று சொல்லக்கூடிய அதாவது வடிகட்டி உள்ளது. எனவே புகை பிடிக்காதவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட, புகை பிடிப்பவர்களுக்கு பாதிப்பு குறைவு. வெளியில் உள்ள நெருப்பு பகுதியில் இருந்து வரக்கூடிய புகை அருகில் உள்ளவர்களுக்கு அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வு கூறுகிறது என்றார். இந்த முகாமில் கலந்து கொண்ட அனைவரும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் அரிமளம் ஊராட்சி ஒன்றியம், நமணசமுத்திரத்தில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

Related Tags :
Next Story