மாவட்ட செய்திகள்

சாந்தநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் தரிசனம் + "||" + Thousands of devotees visit the temple at Shanthanatha Swami temple

சாந்தநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் தரிசனம்

சாந்தநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் தரிசனம்
புதுக்கோட்டையில் சாந்தநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கீழராஜ வீதியில் வேதநாயகி அம்மன் உடனுறை சாந்தநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் வேதநாயகி அம்மன் உடனுறை சாந்தநாத சுவாமிக்கு மஞ்சள், சந்தனம், களபம், பால், தயிர் பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுாவாமி, அம்மனுக்கு வெள்ளிக்காப்பு சாற்றப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


திருக்கல்யாணம்

தொடர்ந்து மாலையில் புதுக்கோட்டை கீழ 3-ம் வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து வரதராஜ பெருமாளுடன் பக்தர்கள் தேங்காய், பழங்கள், பூக்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட சீர்வரிசைகளை மேளதாளத்துடன் ஊர்வலமாக சாந்தநாதசுவாமி கோவிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் வரதராஜ பெருமாள் தாரை வார்த்து கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வேதநாயகி அம்மன் உடனுறை சாந்தநாத சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் சர்க்கரை திருப்பாவாடை விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் சர்க்கரை திருப்பாவாடை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
2. திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருவாரூர் அருகே உள்ள திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
3. தஞ்சையில் ஆறுபடை வீடு பாதயாத்திரை வழிபாடு ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
தஞ்சையில் ஆறுபடை வீடு பாதயாத்திரை வழிபாடு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
4. நெரூர் அக்னீஸ்வரர் கோவிலில் நாத உற்சவ பெருவிழா கோலாகலம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
கரூர் அருகே நெரூர் அக்னீஸ்வரர் கோவிலில் நாத உற்சவ பெருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
5. சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் தரிசனம்
சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.