கர்நாடக அரசு சார்பில் வேலை இல்லாத 200 இளைஞர்களுக்கு கார்கள் குமாரசாமி வழங்கினார்
கர்நாடக அரசு சார்பில் வேலை இல்லாத 200 இளைஞர்களுக்கு கார்களை குமாரசாமி வழங்கினார்.
பெங்களூரு,
கர்நாடக அரசு சார்பில் வேலை இல்லாத 200 இளைஞர்களுக்கு கார்களை குமாரசாமி வழங்கினார்.
200 பேருக்கு கார்
கர்நாடக அரசின் ‘ஐராவதா’ என்ற திட்டத்தின் கீழ் வேலை இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு கார்கள் வழங்கப்படுகின்றன. ரூ.225 கோடியில் 4500 ேபருக்கு கார் வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் 200 இளைஞர்களுக்கு கார் வழங்கும் நிகழ்ச்சி பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் 200 ேபருக்கு கார் வழங்கப்பட்டது. இந்த கார்களின் முதல் பயணத்தை குமாரசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குமாரசாமி பேசியதாவது:-
10 சதவீதம் பெண்களுக்கு...
இந்த காரை பெற்ற பயனாளிகள் வருமானம் ஈட்டி குடும்பத்தை நல்ல முறையில் நிர்வகிக்க வேண்டும். காரில் பயணம் செய்பவர்களிடம் சரியான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். இந்த திட்டத்தில் 10 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேலை இல்லாத இளைஞர்களுக்கு இந்த கார்கள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு குமாரசாமி பேசினார்.
இதில் சமூக நலத்துறை மந்திரி பிரியங்க் கார்கே உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒரு காரின் விலை ரூ.5 லட்சம். இந்த தொகை முழுவதையும் அரசே வழங்குகிறது. கார்களை பெற்ற இந்த இளைஞர்கள், தனியார் வாடகை கார் நிறுவனங்களில் பங்கேற்று, தொழில் செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
Related Tags :
Next Story