போலி மதுபான பாட்டில்களை கண்டறிய செல்போன் செயலி மாநில அரசு அறிமுகம் செய்கிறது
போலி மதுபான பாட்டில்களை கண்டறியும் வகையில் புதிய செல்போன் செயலியை மாநில அரசு அறிமுகம் செய்ய உள்ளது.
மும்பை,
போலி மதுபான பாட்டில்களை கண்டறியும் வகையில் புதிய செல்போன் செயலியை மாநில அரசு அறிமுகம் செய்ய உள்ளது.
செயலி மூலம் அறியலாம்
மராட்டிய அரசுக்கு போலி மதுபானங்களால் ஆண்டு தோறும் ரூ.1,800 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும் போலி மதுபானங்களால் வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க மாநில அரசு புதிய செல்போன் செயலியை அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த செயலி மூலம் கடைக்காரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மதுபான பாட்டில் மூடியில் ஒட்டப்பட்டு இருக்கும் ‘பார் கோடை' ஸ்கேன் செய்யவேண்டும்.
அப்போது மதுபானம் எங்கு, எப்போது தயாரிக்கப்பட்டது போன்ற எல்லா விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.
8 மாதங்களில்...
இதுகுறித்து மாநில கலால் துறை மந்திரி சந்திரசேகர் பவன்குலே கூறியதாவது:-
போலி மதுபானங்கள் மூலம் மாநிலத்துக்கு ஆண்டுக்கு 20 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க ‘டிரேஸ் அன்டு டிராக்' என்ற திட்டத்தை 8 மாதங்களுக்குள் செயல்படுத்த உள்ளோம். இதன் மூலம் போலி மதுபானங்களை வாடிக்கையாளர்கள் கண்டறியலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story