வேலையில்லா இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அழைப்பு


வேலையில்லா இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அழைப்பு
x
தினத்தந்தி 1 Jun 2019 3:15 AM IST (Updated: 31 May 2019 9:48 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெறாதவர்கள் உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் பெற சாந்தோமில் உள்ள தொழில் திறனற்றோருக்கான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்புகொள்ள வேண்டும்.

சென்னை,

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மற்றும் பட்டப்படிப்பு படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலையின்றி காத்திருக்கும் இளைஞர்கள் உதவித்தொகை பெற சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம். எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெறாதவர்கள் உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் பெற சாந்தோமில் உள்ள தொழில் திறனற்றோருக்கான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்புகொள்ள வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு உயிர் பதிவேட்டில் உள்ளவர்கள், கிண்டி மகளிர் தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதிமொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட தகவல் சென்னை மாவட்ட கலெக்டர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story