வண்டலூர்-வாலாஜாபாத் இடையே 6 வழி சாலைப்பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை


வண்டலூர்-வாலாஜாபாத் இடையே 6 வழி சாலைப்பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 31 May 2019 10:30 PM GMT (Updated: 31 May 2019 4:44 PM GMT)

வண்டலூர்-வாலாஜாபாத் 6 வழிச்சாலைப் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக வண்டலூர்-வாலாஜாபாத் 6 வழி நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக தாம்பரம், சென்னை, காஞ்சீபுரம், வேலூர், பெங்களூரு, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அரசு பஸ்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.

இந்த 6 வழிச்சாலை பணிகள் முடிவடைந்து வரும் நிலையில் படப்பை உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் பணி முழுமையாக முடிவடையவில்லை. இதனால் படப்பை பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.

மேலும் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியாக இது உள்ளது. இந்த நிலையில் இந்த 6 வழிச்சாலை செல்லும் பகுதியின் ஓரம் படப்பை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்து உள்ளது. இந்த பள்ளியின் எதிரே சாலைப் பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில் உள்ளது. இன்னும் ஒருசில தினங்களில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என தெரிகிறது.

இந்த பள்ளிக்கூட நுழைவுவாயில் எதிரே சாலைப்பணிகளுக்காக ஜல்லி கற்கள் பரப்பப்பட்ட நிலையில் உள்ளது. எனவே மாணவர்கள் நலன் கருதி பள்ளி அமைந்து உள்ள பகுதியில் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story