வெள்ளாற்றின் குறுக்கே, தடுப்பணை கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு


வெள்ளாற்றின் குறுக்கே, தடுப்பணை கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 1 Jun 2019 3:45 AM IST (Updated: 31 May 2019 11:39 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு செய்தார்.

திட்டக்குடி,

திட்டக்குடி அருகே உள்ளது கீழ்ச்செருவாய் கிராமம். இந்த கிராமத்தின் வழியாக செல்லும் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்பது அப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

இங்கு தடுப்பணை கட்டுவதன் மூலம், கீழ்ச்செருவாய், இடைச்செருவாய், வாகையூர், ஆடுதுறை, அத்தியூர், ஒகளுர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், விவசாயத்திற்கும் தடையின்றி தண்ணீர் கிடைக்கும் என்பது அந்த பகுதியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எனவே அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, தடுப்பணை கட்டுவதற்கு அரசு ரூ.22½ கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது. தொடர்ந்து தடுப்பணைகட்டும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேரில் வந்து, தடுப்பணை கட்டும் பணிகளை நேற்று ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பொறியாளர்களிடம், பணிகளை தரமான முறையில் செய்திட வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆய்வின் போது வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Next Story