தேனியில், மனநல மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் கலெக்டர் ஆய்வு
தேனியில் உள்ள மனநல மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு மையத்தில் கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆய்வு செய்தார்.
தேனி,
தேனி சமதர்மபுரத்தில் என்.ஆர்.டி. அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. க.விலக் கில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்ட பின்னர், இந்த அரசு மருத்துவமனை மூடப்பட்டது. பின்னர், இங்கு அரசு மனநல மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு மையம் தொடங்க அரசு திட்டமிட்டது. இதற்காக கட்டிட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் பல ஆண்டுகளாக இந்த கட்டிடம் பயன்பாடு இன்றி இருந்தது.
இதையடுத்து சில மாதங் களுக்கு முன்பு இங்கு அரசு மனநல மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு மையம் செயல்பட தொடங்கியது. தற்போது அங்கு 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மறுவாழ்வு மையத்தை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அங்குள்ள வருகை பதிவேட்டில் மொத்த டாக்டர்களின் எண்ணிக்கை, வருகைபுரிந்த டாக்டர்கள், விடுப்பில் உள்ள டாக்டர்கள், சிறப்பு பிரிவு டாக்டர்கள், உள்நோயாளிகள் இருப்பு, சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகள் இருப்பு விவரம் போன்றவை குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். பின்னர் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்சார வசதி, உணவு தயாரிக்கும் கூடம், சுற்றுப்புற சூழல் ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார்.
அத்துடன், மனநலம் பாதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களையும் பார்வையிட்டார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, வழங்கப்படும் மருந்துகள், மாத்திரைகள், உணவு முறைகள் குறித்தும் டாக்டர்களிடம் கலெக் டர் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் இளங்கோ, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் சரஸ்வதி மற்றும் மருத்துவ அலுவலர்கள் மற்றும் டாக்டர் கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story