கம்பத்தில், ஒட்டுக்குளம் தூர்வாரும் பணி - விவசாயிகள் மகிழ்ச்சி


கம்பத்தில், ஒட்டுக்குளம் தூர்வாரும் பணி - விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 1 Jun 2019 3:45 AM IST (Updated: 1 Jun 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் உள்ள ஒட்டுக்குளம் தூர்வாரும் பணி நடைபெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கம்பம்,

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரின் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் விவசாய நிலங்களில் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் கம்பம் பகுதியில் உள்ள வீரப்பநாயக்கன்குளம், ஒடப்படி, ஒட்டுக்குளம் ஆகிய குளங்களில் தண்ணீர் தேக்கப்பட்டு விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த குளங்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் செடி, கொடிகள் ஆக்கிரமித்து காணப்படுகின்றன. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து குளங்களை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளங்களை தூர்வார வருவாய்த்துறையினர் அனுமதி வழங்கினர். அதன்படி கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஒட்டுக்குளத்தில் வண்டல் மண் எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எனவே குளத்தில் வண்டல் மண் எடுக்கும் இடத்தில் அவ்வப்போது வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story