புகையிலை பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - கலெக்டர் ராஜாமணி பேச்சு


புகையிலை பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - கலெக்டர் ராஜாமணி பேச்சு
x
தினத்தந்தி 1 Jun 2019 3:45 AM IST (Updated: 1 Jun 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

புகையிலை பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் ராஜாமணி பேசினார்.

கோவை,

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்த அனிமேஷன் வீடியோ வெளியீடு நிகழ்ச்சி கோவையில் நடந்தது.

ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் பி.குகன் தலைமை தாங்கினார். இணை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசாமி, புற்றுநோய் அறுவை சிகிச்சை தலைமை டாக்டர்கார்த்திகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜாமணிகலந்து கொண்டு அனிமேஷன் வீடியோவை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புகையிலையால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு போதிய அளவுக்கு இல்லை. இதனால் அதன் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெண் சிசு கொலை தொடர்பாக போதிய அளவுக்கு விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. தற்போது பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் பெண் சிசு கொலை குறைந்து உள்ளது.

அதுபோன்று புகையிலை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து போதியவிழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் புகையிலை பயன்படுத்துவதை முற்றிலும் தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, கோவை மாவட்டத்தில் புகையிலை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் பி.குகன் பேசும்போது, உலகில் ஒரு நிமிடத்தில் 1.1 கோடி சிகரெட்டுகள் புகைக்கப்படுகின்றன. புகைக்கப்பட்ட பின்னர் தூக்கி வீசப்படும் சிகரெட் துண்டுகளை சுத்தம் செய்வதில் அதிகளவில் சிரமம் ஏற்பட்டு உள்ளது என்றார்.

Next Story