தூத்துக்குடியில் வீதி வீதியாக சென்று கனிமொழி எம்.பி. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்


தூத்துக்குடியில் வீதி வீதியாக சென்று கனிமொழி எம்.பி. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்
x
தினத்தந்தி 1 Jun 2019 4:00 AM IST (Updated: 1 Jun 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வீதி, வீதியாக சென்று கனிமொழி எம்.பி. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் வீதி, வீதியாக சென்று கனிமொழி எம்.பி. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து இந்த வெற்றியை பெற்று வந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அவர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தார். நேற்று 2-வது நாளாக அவர் வாக்காளர்களுக்கு, தன்னை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்ததற்காக தனது நன்றியை தெரிவித்தார்.

நேற்று மாலையில் அவர் திறந்த ஜீப்பில் தூத்துக்குடி கிளியோபட்ரா தியேட்டர் முன்பு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. முன்னிலையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

வீதி வீதியாக...

தொடர்ந்து அவர் தூத்துக்குடி பீட்டர் தெரு, பெரியக்கடை தெரு, எம்பரர் தெரு, தெற்கு ராஜா தெரு, இனிகோ நகர், ரோச் காலனி, லயன்ஸ் டவுன், பனிமயநகர், மேல சண்முகபுரம், கீழசண்முகபுரம், பாத்திமா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனிமொழி எம்.பி. வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இதில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story