உடுமலை அருகே முதல் முறையாக எந்திரம் மூலம் கரும்பு வெட்டும் பணி தொடக்கம்
உடுமலை அருகே முதல்முறையாக எந்திரம் மூலம் கரும்பு வெட்டும் பணி தொடங்கியது.
உடுமலை,
உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை 1960-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறையின் மூலம் தொடங்கப்பட்ட முதல் சர்க்கரை ஆலை இது தான். இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தை கரும்பு அரவை பருவமாக கொண்டு இயங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சர்க்கரை ஆலையும் எந்தெந்த பகுதியில் இருந்து கரும்பு கொள்முதல் செய்துகொள்ளலாம் என்று எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் ,பழனி, பல்லடம் ஆகிய தாலுகாக்களில் உள்ள ஆலை அங்கத்தினர்களான கரும்பு விவசாயிகளிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆலைக்கு கொள் முதல் செய்யப்படும் கரும்புகளை வெட்டுவதற்கு விழுப்புரம், உளுந்தூர்பேட்டை ,புதுச்சேரி, சேலம்,தர்மபுரி ஆகிய பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் பலர் வேலைக்கு வருகின்றனர்.
இவர்கள் கரும்பில் உள்ள சோகைகளை வெட்டி அகற்றி விட்டு நீளமான கரும்பை கட்டுக்கட்டாக கட்டி வைப்பார்கள். பின்னர் அவற்றை லாரி, டிராக்டர்கள் மூலம் ஆலைக்கு அனுப்பி வைக்கப்படும். கரும்பு வெட்டு வதற்கான கூலியை ஆலை நிர்வாகம் முடிவு செய்யும். நடப்பாண்டில் கரும்பு வெட்டுவதற்கு டன்னுக்கு ரூ.610 முதல் ரூ.620 வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கரும்பு வெட்டுவதற்கு எந்திரத்தை பயன்படுத்துவது போன்று, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையிலும் பயன்படுத்துவது குறித்து கடந்த சில ஆண்டுகளாக பரிசீலிக்கப்பட்டு வந்தது. அது இப்போதுதான் நடைமுறைக்கு வந்துள்ளது. தற்போது கரும்பு வெட்டும் எந்திரம் பொருத்தப்பட்ட பிரத்யேக வாகனம் ஒன்று இந்த ஆலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 5 அடி பார் கட்டி பயிரிடப்பட்டுள்ள கரும்பு வயல்களில் மட்டுமே இந்த எந்திரம் மூலம் கரும்பு வெட்டமுடியும். இந்த கரும்பு வெட்டும் எந்திரம் மூலம் ஒரு நாளைக்கு 150 டன் கரும்பு வெட்டும். அத்துடன் எந்திரம் மூலம் கரும்பு வெட்டுவதற்கு ஒரு டன்னுக்கு வெட்டுக்கூலி ரூ.560 என்று ஆலை நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ளது.
இந்த நிலையில் முதல்முறையாக உடுமலையை அடுத்துள்ள போடிபட்டியில் எல்.தனலட்சுமி லோகநாதன் என்பவரது வயலில் எந்திரம் மூலம் கரும்பு வெட்டப்பட்டது. அதை கல்லாபுரத்தை சேர்ந்த ராம கிருஷ்ணன் உள்ளிட்ட பல விவசாயிகள் வந்து எந்திரம் மூலம் கரும்பு வெட்டுவதை பார்த்து சென்றனர்.

Related Tags :
Next Story