பட்டா வழங்கப்பட்ட இடத்தை அளவீடு செய்யக்கோரி மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்
பட்டா வழங்கப்பட்ட இடத்தை அளவீடு செய்யக்கோரி மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மடத்துக்குளம்,
கடந்த சில நாட்களுக்கு முன்பு மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் ஆறுமுகம், பஞ்சலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மடத்துக்குளம் தாலுகா செயலாளர் பன்னீர் செல்வம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு சென்று மனு கொடுத்தனர். அந்த மனுவில் குமரலிங்கம் பகுதியில் பெருமாள்புதூர் சாலையில் உள்ள காட்டாளம்மன் கோவில் அருகே 100 பேருக்கு இலவச வீ்ட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
ஆனால் இதுவரை அந்த நிலத்தை அளந்து விடவில்லை. எனவே விரைந்து அந்த நிலத்தை அளவீடு செய்யக்கோரி அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பட்டா வைத்திருந்த பொதுமக்கள் நேற்று மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர்.
அப்போது ஏற்கனவே கொடுக்கப்பட்ட மனு மீது உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட இடத்தில் குடிசையமைத்து குடியேறுவோம் என்றனர். இதையடுத்து தாசில்தார் பழனியம்மாள், அவர்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story