கோவில்பட்டியில் பெண்களிடம் 8 பவுன் தங்க சங்கிலி பறிப்பு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


கோவில்பட்டியில் பெண்களிடம் 8 பவுன் தங்க சங்கிலி பறிப்பு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 1 Jun 2019 3:00 AM IST (Updated: 1 Jun 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் பெண்களிடம் 8 பவுன் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் பெண்களிடம் 8 பவுன் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெண்களிடம் சங்கிலி பறிப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல் மில் காலனியை சேர்ந்தவர் முருகன் மனைவி பூமாடத்தி (வயது 42). இவர் நேற்று முன்தினம் இரவு இலுப்பையூரணி பஞ்சாயத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மோட்ார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் பூமாடத்தி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதில் சுதாரித்துகொண்ட பூமாடத்தி சங்கிலியை இறுக பிடித்து கொண்டு திருடன் திருடன் என சத்தம் போட்டார். இதில் சங்கிலி இரண்டு துண்டாக அறுந்தது. இதனால் 3 பவுன் சங்கிலி மர்ம நபர்களிடமும், 3 பவுன் சங்கிலி பூமாடத்தியிடம் இருந்தது. உடனே அந்த மர்ம நபர்கள் 3 பவுன் சங்கிலியுடன் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

இதேபோல் கோவில்பட்டி ஜோதி நகரை சேர்ந்தவர் காசிமாரியப்பன் மனைவி ஜெகஜோதி (54). இவர் நேற்று முன்தினம் இரவில் கடலைக்கார தெருவில் உள்ள நடுநிலைப்பள்ளி அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் ஜெகஜோதி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு, மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.

மற்றொரு சம்பவம்

தெற்கு புதுக்கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணியம்மாள் (74). இவர் நேற்று முன்தினம் அருகே உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். உடனே அந்தோணியம்மாள் சுதாரித்து கொண்டு, சங்கிலியை இறுக பிடித்து கொண்டார். உடனே மர்ம நபர்கள் 2 பேரும் அந்தோணியம்மாளை கீழே தள்ளிவிட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இந்த சம்பவங்கள் குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இதில் இந்த 3 சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே நபர்கள் தான் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story