கோவில்பட்டி அருகே டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகை


கோவில்பட்டி அருகே டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 1 Jun 2019 3:15 AM IST (Updated: 1 Jun 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் முற்றுகை

கோவில்பட்டி அருகே உள்ள கடலையூர்-வரதம்பட்டி சாலையில் நேற்று முன்தினம் புதிதாக அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலையூர், வள்ளிநாயகிபுரம், உருளைகுடி, வரதம்பட்டி பகுதி பொதுமக்கள் அந்த டாஸ்மாக் கடைக்கு சென்றனர். பின்னர் அந்த கடையின் முன்பு அமர்ந்து கடையை அகற்ற வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கடையை நிரந்தரமாக மூட வேண்டும். திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கூறி கோஷங்கள் எழுப்பினர். உடனே கடை விற்பனையாளர் உடனடியாக கடையை பூட்டினார்.

பரபரப்பு

இதுகுறித்து தகவலறிந்த நாலாட்டின்புத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் கடையை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மீண்டும் இந்த கடை திறக்கப்பட்டால் போராட்டம் நடத்துவோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story