ஏர்வாடி அருகே துணிகரம் விவசாயி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு


ஏர்வாடி அருகே துணிகரம் விவசாயி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 1 Jun 2019 3:00 AM IST (Updated: 1 Jun 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

ஏர்வாடி அருகே விவசாயி வீட்டில் 40 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஏர்வாடி, 

ஏர்வாடி அருகே விவசாயி வீட்டில் 40 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விவசாயி

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே திருக்குறுங்குடி கீழ நம்பித்தோப்பு நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 60). விவசாயி. இவருடைய மனைவி லட்சுமி (56). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணமாகி, நாகர்கோவிலில் கணவரின் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஸ்டீபன் தன்னுடைய மனைவியுடன், நாகர்கோவிலில் உள்ள தன்னுடைய மகளின் வீட்டுக்கு சென்றார்.

நகைகள் கொள்ளை

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் ஸ்டீபனின் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள், வீட்டில் இருந்த 2 பீரோக்களை உடைத்து திறந்தனர். அதில் ஒரு பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர். மேலும் வீட்டில் இருந்த டிஜிட்டல் கேமரா உள்ளிட்ட பொருட்களையும் மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

நேற்று முன்தினம் மாலையில் ஸ்டீபன் தன்னுடைய மனைவியுடன் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு மற்றும் பீரோக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும், நகை, பணம், பொருட்கள் திருடு போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

போலீஸ் வலைவீச்சு

இதுகுறித்து திருக்குறுக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர் பதிவு செய்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் கதவை உடைத்து நகைகள், பணத்தை கொள்ளைடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். விவசாயி வீட்டில் 40 பவுன் நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story