ராஜபாளையம் அருகே மாந்தோப்பில் கிடந்த குண்டு வெடித்து மாட்டின் தாடை கிழிந்தது
ராஜபாளையம் அருகே மாந்தோப்பில் கிடந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் மாட்டின் தாடை கிழிந்தது.
தளவாய்புரம்,
விருதுநகர் மாவட்டம் சேத்தூர் அருகே உள்ள சுந்தரராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது39). இவர் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இந்த பகுதியில் மழை பெய்து உள்ளது. இதனால் மாடுகள் கலைந்து ஓடின. அதில் ஒரு மாடுஅந்தப்பகுதியில் உள்ள மாந்தோப்பிற்குள் சென்று உள்ளது.
அங்கு குப்பையுடன் கிடந்த பொருளை கடித்துள்ளது. அது திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து மாட்டின் தாடை கிழிந்து ரத்தம் கொட்டியது. ரத்தம் சொட்ட சொட்ட மற்ற மாடுகளுடன் வந்து நின்றது.
இதனை நேற்று காலைதான் மாட்டின் உரிமையாளர் ஈஸ்வரன் பார்த்து உள்ளார். உடனே கால்நடை மருத்துவமனைக்கு மாட்டை கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளார். தற்போது அந்த மாட்டின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சேத்தூர் புறக்காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மாந்தோப்பு பகுதியில் வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து சேதப்படுத்தி வருகிறது. இதைதடுக்க யாரோ நாட்டு வெடிகுண்டை தோப்பில் போட்டு இருக்கலாம். அது வெடித்து மாட்டின் தாடை கிழிந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். நாட்டு வெடிகுண்டை இவ்வாறு போட்டுச்சென்றது யார் என்று தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொடுத்தவர்கள் யார் என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாட்டு வெடிகுண்டு தயாரிப்போரை உடனடியாக கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது பற்றி தகவல் அறிந்த வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story