தற்கொலை செய்த இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


தற்கொலை செய்த இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 Jun 2019 3:00 AM IST (Updated: 1 Jun 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

தற்கொலை செய்த இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுரண்டை, 

தற்கொலை செய்த இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளம்பெண் தற்கொலை

செங்கோட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சந்தியா (29). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மணிகண்டன் சரியாக வேலைக்கு செல்லாமல், அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு, மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தியா தன்னுடைய குழந்தைகளுடன் கீழச் சுரண்டை தெற்கு தெருவில் உள்ள தன்னுடைய பெற்றோரின் வீட்டுக்கு சென்றார்.

கடந்த 27-ந்தேதி மணிகண்டன் தன்னுடைய மாமனாரின் வீட்டுக்கு சென்று, சந்தியாவை குடும்பம் நடத்த வருமாறு அழைத்து தகராறு செய்தார். இதனால் மனமுடைந்த சந்தியா விஷம் குடித்து தற்கொலை செய்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது. இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தியாவை தற்கொலைக்கு தூண்டியதாக, அவருடைய கணவர் மணிகண்டன், மாமியார் மாரியம்மாள் (55) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

உடலை வாங்க மறுத்து போராட்டம்

இதற்கிடையே மாமனாரின் வீட்டில் தகராறு செய்த மணிகண்டன் குறித்து, அவருடைய மனைவி சந்தியா ஏற்கனவே சுரண்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அப்போது போலீசார் மணிகண்டன் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், மெத்தனமாக செயல்பட்டதாக கூறி, சந்தியாவின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே அவர்களிடம், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து மாலையில் சந்தியாவின் உடலை உறவினர்கள் வாங்கிச் சென்று, இறுதிச்சடங்கு நடத்தினர்.

Next Story