நெல்லையில் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
நெல்லையில் கலெக்டர் அலுவலகத்தை நேற்று பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
நெல்லையில் கலெக்டர் அலுவலகத்தை நேற்று பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளம் என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் அரசு புறம் போக்கு நிலம் தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே ஒரு தரப்பை சேர்ந்தவர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவர்களை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்து மகா சபா மாநில துணை தலைவர் கணேசன் தலைமையில் அடைமிதிப்பான் குளம் பொதுமக்கள் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பு கொடுக்க வேண்டும்
பின்னர் கிராம மக்கள் சார்பில் மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், “அடைமிதிப்பான் குளத்தில் இரு தரப்பினர் இடையே நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. முன்னீர்பள்ளம் போலீசார் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். எங்கள் தரப்பை சேர்ந்தவர்களை முன்னீர்பள்ளம் போலீஸ் சப்-இன்பெக்டர் அழைத்து சென்று பொய் வழக்கு போட்டு விடுவதாக மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் தரப்பை சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story