நடிகர் அமீர்கான் அலுவலகம் முன்பு விஷம் குடித்த வாலிபரால் பரபரப்பு


நடிகர் அமீர்கான் அலுவலகம் முன்பு விஷம் குடித்த வாலிபரால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Jun 2019 4:30 AM IST (Updated: 1 Jun 2019 4:15 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் அமீர்கான் அலுவலகம் முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை, 

நடிகர் அமீர்கான் அலுவலகம் முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

விஷம் குடித்த வாலிபர்

மும்பை கார் பகுதியில் இந்தி நடிகர் அமீர்கானின் அலுவலகம் உள்ளது. சம்பவத்தன்று நடிகர் அமீர்கானை சந்திப்பதற்கு வாலிபர் ஒருவர் வந்தார். அங்கிருந்த பாதுகாவலர்கள் அவருக்கு அனுமதி மறுத்தனர். இதனால் விரக்தி அடைந்த அவர், திடீரென தான் பாட்டிலில் கொண்டு வந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாவலர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்த னர்.

இதுபற்றி தகவல் அறிந்த வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில், அவரது பெயர் முகமது காஷிம்(வயது33) என்பதும், கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

காரணம் என்ன?

நடிகர் அமீர்கான் அலுவலகம் முன்பு வாலிபர் தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக கீழ்க்கண்ட தகவல்கள் தெரியவந்தன. முகமது காஷிம் ஊரக பகுதிகளில் வேலைவாய்ப்புகளை பெருக்குவதில் ஆர்வம் காட்டி வந்தார். இதற்காக ‘பாணி பவுண்டேன்’ என்ற தொண்டு நிறுவனம் நடத்தி மராட்டிய ஊரக பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க முயற்சி எடுத்து வரும் நடிகர் அமீர்கானிடம் ஆலோசனை பெற விரும்பினார்.

எனவே அவர் மும்பை வந்து பலமுறை அமீர்கானை சந்திக்க முயற்சி செய்தார். ஆனால் அமீர்கானை சந்திக்க பாதுகாவலர்கள் அவரை அனுமதியளிக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் இந்த முறை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதால் உயிர் தப்பினார். போலீசார் அவரிடம் வாக்குமூலம் வாங்கிக்கொண்டு, அவரது பெற்றோரை வரவழைத்து அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story