மாதாந்திர பராமரிப்பு பணியால், தாந்தோன்றிமலை-வெள்ளியணை பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்


மாதாந்திர பராமரிப்பு பணியால், தாந்தோன்றிமலை-வெள்ளியணை பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 1 Jun 2019 3:30 AM IST (Updated: 1 Jun 2019 4:31 AM IST)
t-max-icont-min-icon

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக தாந்தோன்றிமலை, வெள்ளியணை பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

கரூர்,

கரூர் மின்வினியோக வட்டத்துக்கு உட்பட்ட வெள்ளியணை, தாந்தோன்றிமலை ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் உயர் அழுத்த மின் கம்பித்தொடர் நிறுவும் பணிகள் நடைபெற உள்ளது.

எனவே இந்த துணைமின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் வெள்ளியணை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கணாங்குறிச்சி, விஜயநகரம், கந்தசாராபட்டி, முஷ்டகிணத்துப்பட்டி மற்றும் தாந்தோன்றிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாளப்பட்டி, கன்னிமார் பாளையம்.

பசுபதிபாளையம், ஏமூர், மின்நகர், ஆட்சிமங்கலம், ராயனூர், கொரவப்பட்டி, பாகநத்தம், பத்தாம்பட்டி, செல்லாண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி மின்சார வினியோகம் இருக்காது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததும் மின்வினியோகம் செய்யப்படும் என கரூர் இயக்குதலும், காத்தலும் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தாமரை வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story