கோபி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை; குடிப்பழக்கத்தை கைவிட முடியாததால் விபரீத முடிவு


கோபி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை; குடிப்பழக்கத்தை கைவிட முடியாததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 2 Jun 2019 3:45 AM IST (Updated: 1 Jun 2019 11:51 PM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே குடிப்பழக்கத்தை கைவிட முடியாததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கடத்தூர்,

கோபி அருகே உள்ள மொடச்சூர் ராஜன்நகரை சேர்ந்தவர் ராமன் (வயது 55). தொழிலாளி. அவருடைய மனைவி வசந்தி (48). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். ராமனுக்கு குடிப்பழக்கம் உண்டு.

இதனால் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனால் உடல்நலம் சரியாகவில்லை.

இந்த நிலையில் குடிப் பழக்கத்தை கைவிட முடியாததால் மனம் உடைந்த அவர் நேற்று விஷம் குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராமன் இறந்தார். இந்த விபத்து குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story