தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் - சுப்பராயன் எம்.பி. பேட்டி


தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் - சுப்பராயன் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 2 Jun 2019 4:45 AM IST (Updated: 1 Jun 2019 11:51 PM IST)
t-max-icont-min-icon

தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று சுப்பராயன் எம்.பி. கூறினார்.

ஈரோடு,

திருப்பூர் கே.சுப்பராயன் எம்.பி. நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் என்னை வெற்றி அடைய செய்த வாக்காளர்களுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பிலும், தி.மு.க. தலைமையிலான கூட்டணி சார்பிலும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தேர்தலின்போது திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெறாது என்று கருத்து கணிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டன. ஆனால் அதை தவறாக்கும் விதத்தில் வாக்காளர்கள் என்னை 93 ஆயிரத்து 368 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைய செய்து இருக்கிறார்கள்.

எதை எதிர்பார்த்து வாக்கு அளித்தார்களோ அதை நிறைவேற்றும் வகையில் மக்களுக்காக பாடுபடுவேன். தமிழக அரசின் எந்தவொரு திட்டத்திலும் கமி‌ஷன் அதிகமாக உள்ளது. இது மறுக்க முடியாத உண்மை.

வருகிற ஆகஸ்டு மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதாக கூறி வருகிறார்கள். ஆனால் கண்டிப்பாக உள்ளாட்சி தேர்தலை நடத்தமாட்டார்கள். சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. எனவே மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் வெற்றி பெற்ற 37 எம்.பி.க்களும் ஒன்றாக சேர்ந்து தமிழக நலனுக்காக செயல்படுவோம். நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியே மக்கள் மன்றத்திலும் தமிழக மக்களின் நலன் காக்க போராடுவோம். ஒருபோதும் தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்.

ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், பவானி, பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் பாசன வசதிகள் கிடையாது. அங்கு நிலத்தடி நீர்மட்டத்தை செறிவூட்டும் வகையில்,சுற்றுவட்டார பகுதியில்உள்ள குளம், குட்டைகளைதூர்வாரவலியுறுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story