வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம்: மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை


வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம்: மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 2 Jun 2019 4:30 AM IST (Updated: 2 Jun 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் மீனவர்கள் 2-வது நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை.

வேதாரண்யம்,

வேதாரண்யம் அருகே கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தில் நேற்று முன்தினம் சூறைக்காற்று வீசியது. இதனால் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதை தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

இந்த நிலையில் நேற்றும் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் கடல் சீற்றமாக காணப்பட்டதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்திருந்தனர்.

தற்போது மீன்பிடி தடைக்காலம் நடைபெறுவதால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அனுமதி கிடையாது. இதனால் பைபர் படகு மீனவர்கள் குறைந்த அளவு தூரம் சென்று மீன்பிடித்து வந்தனர். தற்போது கடல் சீற்றத்தால் 2-வது நாளாக பைபர் படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்லாததால் வேதாரண்யம் பகுதியில் மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டது. கடல் சீற்றம் குறைந்த உடன் மீன்பிடிக்க செல்வோம் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

Next Story