கீழையூர் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு
கீழையூர் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு செய்தார்.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் கீழையூர்் ஊராட்சி ஒன்றியம் காரைநகர், லாக்கடி உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்க தொட்டிகளையும், தலையாழமழை ஊராட்சி பெரியத்தும்பூர் கிராமத்தில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து திருக்குவளை கிராமத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் நாகை நகராட்சி, கீழ்வேளூர் பேரூராட்சி, வேளாங்கண்ணி மற்றும் 890 குடியிருப்புகளுக்கான நீரேற்று நிலையங்கள், எட்டுக்குடி கிராமத்தில் நீரேற்று நிலையம் மற்றும் ஈசனூர் கிராமத்தில் உள்ள நீரேற்று நிலையம் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
அப்போது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
மேலும் குடிநீர் குழாய்களில் பாதிப்பு ஏற்படும் இடங்களில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என்றார்.
ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், உதவி இயக்குனர் ராஜசேகரன் (ஊராட்சிகள்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜீ, மீனா, செயற்பொறியாளர் செல்வராஜ், திருக்குவளை தாசில்தார் கோமதி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story