கடலூர் கேப்பர்மலையில், காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி - போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பார்வையிட்டார்
கடலூர் கேப்பர்மலையில் பயிற்சி காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பார்வையிட்டார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 243 காவலர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு கவாத்து பயிற்சி, கராத்தே, யோகா, நீச்சல், ஓட்டுனர், முதல் உதவி மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பயிற்சி காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி கடலூர் கேப்பர்மலையில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் கடந்த 29-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நேற்று 4-வது நாளாக இந்த பயிற்சி நடைபெற்றது.
இதில் பயிற்சி காவலர்கள் தரையில் படுத்துக்கொண்டு பாயிண்ட் 22 ரைபிள், 303 ரைபிள், 410 மஸ்கட் ஆகிய ரக துப்பாக்கிகளை பயன்படுத்தி இலக்கை நோக்கி சுட்ட னர். ஒரு பயிற்சி காவலர் ஒரு ரக துப்பாக்கியை கொண்டு 10 முறை சுட வேண்டும் என்ற அடிப்படையில் 3 ரக துப்பாக்கிகளை பயன்படுத்தி மொத்தம் 30 முறை சுட்டனர். துப்பாக்கி சுடும் பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேரில் பார்வையிட்டார். ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் பயிற்சி பள்ளியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
Related Tags :
Next Story