திசையன்விளை அருகே கடைகளில் பணம் திருடிய ஓட்டல் தொழிலாளி கைது


திசையன்விளை அருகே கடைகளில் பணம் திருடிய ஓட்டல் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 2 Jun 2019 3:00 AM IST (Updated: 2 Jun 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை அருகே கடைகளில் பணம் திருடிய ஓட்டல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

திசையன்விளை,

திசையன்விளை அருகே கடைகளில் பணம் திருடிய ஓட்டல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கடைகளில் திருட்டு

திசையன்விளை அருகே மடத்து அச்சம்பாட்டைச் சேர்ந்தவர் பிலிப் போஸ் டேனியல் (வயது 65). உவரியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (45). இவர்கள் 2 பேரும் திசையன்விளை மெயின் பஜாரில் தனித்தனியாக மளிகை கடை நடத்தி வருகின்றனர். கடந்த 28-ந்தேதி இரவில் இவர்கள் 2 பேரின் மளிகைக்கடைகளின் மேற்கூரை ஓடுகளை பிரித்து மர்மநபர் உள்ளே நுழைந்தார். பிலிப் போஸ் டேனியல் கடையில் இருந்த ரூ.11 ஆயிரத்தையும், செல்வகுமாரின் கடையில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் மர்மநபர் திருடிச் சென்றார்.

இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். செல்வகுமாரின் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில், அங்கு திருடிய மர்மநபரின் உருவம் பதிவாகி இருந்தது. அதன்மூலம் போலீசார் துப்பு துலக்கினர்.

ஓட்டல் தொழிலாளி கைது

போலீசாரின் விசாரணையில், அங்குள்ள 2 கடைகளிலும் திருடியது, திசையன்விளை அற்புத விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் ரமேஷ் (32) என்பது தெரிய வந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.5,500-யை பறிமுதல் செய்தனர். கைதான ரமேசுக்கு சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆகும்.

இவர் செல்வகுமாரின் மளிகை கடையின் அருகில் உள்ள ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story