வாகன இன்சூரன்ஸ் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் - சி.ஐ.டி.யு. மாநாட்டில் தீர்மானம்
வாகன இன்சூரன்ஸ் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என்று சி.ஐ.டி.யு. மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட மோட்டார் ஆட்டோமொபைல்ஸ் லேபர் யூனியனின்(சி.ஐ.டி.யு.) 11-வது மாநாடு திருப்பூரில் உள்ள சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்ட தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் செல்லதுரை மாநாட்டை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் அன்பு ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
பெட்ரோல், டீசல் கட்டண உயர்வை கட்டுப்படுத்துவதுடன், அவற்றை ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் கொண்டு வந்து விலையை குறைக்க வேண்டும். வாகன இன்சூரன்ஸ் கட்டண உயர்வை குறைக்க வேண்டும். திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி பணியிடத்தை உடனடியாக நிரப்பி தேங்கி கிடக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்தி, பழுதடைந்த சாலைகளை செப்பனிட்டு வாகன விபத்துகளை தடுக்க வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் விண்ணப்பங்களை தமிழ் மொழியில் வழங்க வேண்டும். காவல்துறையும், போக்குவரத்து காவல் துறையும் வாகன சோதனை என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில், சங்கத்தின் மாவட்ட தலைவராக விஸ்வநாதன், செயலாளராக அன்பு, பொருளாளராக அருண், துணை தலைவர்களாக தண்டபாணி, சுதா சுப்பிரமணியம், ரமேஷ், துணை செயலாளர்களாக பாலு, சரவணன், சம்பத் மற்றும் கமிட்டி உறுப்பினராக 16 பேர், சிறப்பு அழைப்பாளர்கள் 4 பேர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரங்கராஜ் நிறைவுரையாற்றினார். முடிவில் பொருளாளர் அருண் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story