காவேரிப்பட்டணம் அருகே ஆசிரியர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை
காவேரிப்பட்டணம் அருகே ஆசிரியர் வீட்டில் 10 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள செல்லம்பட்டியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 36). இவர் புங்கம்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி கவுசல்யா. இவரும் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று கணவன், மனைவி இருவரும் ஆன்மிக சுற்றுலாவுக்கு சென்றனர். பின்னர் இருவரும் நேற்று வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகைகளை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து வினோத்குமார் நாகரசம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story