பிரதமருக்கு விவசாயிகள் நன்றி


பிரதமருக்கு விவசாயிகள் நன்றி
x
தினத்தந்தி 2 Jun 2019 4:00 AM IST (Updated: 2 Jun 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் பகுதியில் விவசாயிகள் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடத்தினர்.

ஸ்ரீபெரும்புதூர்,

நாட்டின் பிரதமராக பதவியேற்ற உடனேயே விவசாயிகள் நலன் காக்கும் வகையில் ‘பிரதம மந்திரி கவுரவ நிதி உதவித்தொகை’ திட்டத்துக்கு நரேந்திர மோடி கையெழுத்திட்டார். இந்த திட்டத்தை வரவேற்கும் விதமாக காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் பகுதியில் விவசாயிகள் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடத்தினர். இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று பேசினார்.

பின்னர் அவர் புதிய கல்வி கொள்கையில் இந்தி திணிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக கூறுகையில்:-

தற்போது வந்திருப்பது வரைவு அறிக்கைதான் என்றார். மேலும் பயிர் காப்பீட்டு திட்டம் குறித்து கேட்டபோது பாதிக்கப்படும் விவசாயிகள் அனைவருக்கும் காப்பீட்டு தொகை கிடைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும். பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம், விவசாயிகளின் உயிர் காப்பீட்டு திட்டம் என்பதை உணர்ந்து அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பா.ஜ.க. காஞ்சீபுரம் மாவட்டத் தலைவர் மோகன்ராஜ், மாவட்ட செயலாளர் பாபு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Next Story