காவல்கிணறு பகுதியில் குளங்கள் தூர்வாரும் பணி கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்


காவல்கிணறு பகுதியில் குளங்கள் தூர்வாரும் பணி கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 2 Jun 2019 4:00 AM IST (Updated: 2 Jun 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

காவல்கிணறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், குளங்களை தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பணகுடி, 

காவல்கிணறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், குளங்களை தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்

நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதிகளில் காவல்கிணறு புதூர், மணிமாலைகுளம், விநாயகர்பெருமாள்குளம், புதுக்குளம் ஆகிய குளங்களை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து தூர்வாருகின்றன. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஷில்பா நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், மாவட்டம் முழுவதும் உள்ள நீர் நிலைகளை தூர்வாரி தண்ணீரை வீணாக்காமல் விவசாயத்திற்கு பயன்படுத்தவும், பாதுகாக்கவும் திட்டமிடப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்றாலம், தென்காசி பகுதிகளில் சிற்றாறு உள்ளிட்ட முக்கிய நீர் நிலைகளை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை

அதனை தொடர்ந்து இன்று (அதாவது நேற்று) மாவட்ட எல்லை பகுதியும், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள நீர்நிலைகளான மணிமாலைகுளம், விநாயகர்பெருமாள்குளம், புதுக்குளம் ஆகியவைகள் தூர்வாரப்படுகின்றன. இதன்மூலம் 600 ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறும். மேலும் மழைநீரும் பாதுகாக்கப்படும். இதுபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

அண்ணா பல்கலைக்கழக முதல்வர் சக்திநாதன், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், ராதாபுரம் தாசில்தார் (பொறுப்பு) ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story