நெல்லையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை ஓட்டல் தொழிலாளி கைது


நெல்லையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை ஓட்டல் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 2 Jun 2019 3:00 AM IST (Updated: 2 Jun 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டல் தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

நெல்லை, 

நெல்லையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டல் தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

ஓட்டல் தொழிலாளி

நெல்லை மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செய்யது அலி. இவருடைய மகன் முகமது அசாருதீன் (வயது 20). இவர் பாளையங்கோட்டை சாந்திநகர் பகுதியில் உள்ள ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கும், 10-ம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் செல்போன் மூலம் அடிக்கடி பேசி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த மாணவி திடீரென்று மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

கைது

போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மாணவியை முகமது அசாருதீன், நெல்லையில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்கு அழைத்து சென்றதும், அங்கு அவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த மாணவியை போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, முகமது அசாருதீனை கைது செய்தனர்.

Next Story