கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி வடமாநில தொழிலாளி சாவு


கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி வடமாநில தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 2 Jun 2019 3:00 AM IST (Updated: 2 Jun 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே போரக்ஸ் என்ற இடத்தில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தவர் மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த தொழிலாளி சாஜு சிவமுரட் யாதவ் (வயது 28).

இவர் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்ற போது சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்துக்கு காரணமான மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற ஆந்திராவை சேர்ந்த ஜெயசூர்யா பிரகாஷ் ரெட்டி (26) என்பவரும் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

Next Story