பாதாள சாக்கடை திட்டப் பணிகள் சேலம் சின்னக்கடை வீதியில் 5-ந் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்


பாதாள சாக்கடை திட்டப் பணிகள் சேலம் சின்னக்கடை வீதியில் 5-ந் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 2 Jun 2019 3:45 AM IST (Updated: 2 Jun 2019 3:18 AM IST)
t-max-icont-min-icon

பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக சேலம் சின்னக்கடை வீதியில் வருகிற 5-ந் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

சேலம், 

சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் ெவளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலம் அம்மாபேட்டை மண்டல வார்டு எண் 33-ல் சின்னக்கடை வீதி பட்டை கோவில் முதல் கோ-ஆப்டெக்ஸ் வரையிலான பகுதிகளில வருகிற 5-ந் தேதி முதல் முதற்கட்ட பாதாள சாக்கடை திட்ட குழாய் பதிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன் அடிப்படையில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அம்மாபேட்டை செல்லும் டவுன் பஸ்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் வழக்கம்போல் இயங்கும். மேலும், அம்மாபேட்டை வழியாக பழைய பஸ் நிலையத்துக்கு செல்லும் டவுன் பஸ்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் நஞ்சம்பட்டி சந்திப்பு, பொன்னம்மாபேட்டை டி.எம்.எஸ் கமலா சந்திப்பு, டவுன் ெரயில் நிலையம் வழியே பேலஸ் தியேட்டர் சந்திப்பு, திருவள்ளுவர் சிலை வழியாக பழைய பஸ் நிலையத்தை சென்றடைய வேண்டும்.

எனவே, இந்த பணிகள் முடிவடையும் வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மாற்று வழிதடங்களை பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story