மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய சாத்தியமில்லை பி.இ.எல். நிறுவனத்தின் இயக்குனர் கவுதம் பேட்டி


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய சாத்தியமில்லை பி.இ.எல். நிறுவனத்தின் இயக்குனர் கவுதம் பேட்டி
x
தினத்தந்தி 2 Jun 2019 4:00 AM IST (Updated: 2 Jun 2019 3:55 AM IST)
t-max-icont-min-icon

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய சாத்தியமில்லை என்றும், சந்தேகம் இருந்தால் கோர்ட்டுக்கு செல்லலாம் என்றும் பி.இ.எல்.நிறுவனத்தின் இயக்குனர் கவுதம் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய சாத்தியமில்லை என்றும், சந்தேகம் இருந்தால் கோர்ட்டுக்கு செல்லலாம் என்றும் பி.இ.எல்.நிறுவனத்தின் இயக்குனர் கவுதம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு சொந்தமான பி.இ.எல். நிறுவனத்தின் இயக்குனர் கவுதம், பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

முறைகேடு நடைபெற சாத்தியமில்லை

நாடாளுமன்ற தேர்தலுக்காக பி.இ.எல். நிறுவனம் 400 தொகுதிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி.வி.பேட்களை தயாரித்து தேர்தல் ஆணையத்திடம் வழங்கி இருந்தது. இதன்மூலம் பி.இ.எல். நிறுவனத்திற்கு ரூ.2,600 கோடி வருமானம் கிடைத்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். எங்கள் நிறுவனம் தயாரித்து கொடுத்துள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முடக்குவதற்கோ அல்லது முறைகேடு செய்வதற்கோ எக்காரணத்தை கொண்டும் சாத்தியமில்லை.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க எல்லா விதமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. எங்கள் நிறுவனம் தயாரித்து கொடுக்கும் ஒவ்வொரு எந்திரங்களும் மிகவும் பாதுகாப்பானவை ஆகும். நாங்கள் தயாரித்து கொடுக்கும் எந்திரங்கள் பல முறை ஆய்வுக்காக உட்படுத்தப்படுகின்றன. அதன்பிறகே, தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துகிறது. ஒருவேளை நாங்கள் தயாரித்து கொடுத்துள்ள எந்திரங்கள் மீது சந்தேகம் இருந்தால், அதுபற்றி கோர்ட்டுக்கு செல்லலாம்.

புகார்கள் வரவில்லை

நாடாளுமன்ற தோ்தல் முடிவுகள் வெளியான பின்பு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 45 நாட்கள், எங்களது நிறுவனத்தில் வைக்கப்பட்டு இருக்கும். கோர்ட்டில் அனுமதி பெற்று அந்த எந்திரங்கள் மீது சந்தேகம் இருந்தால், அதுபற்றி ஆய்வு செய்து தெரிந்து கொள்ளலாம். நாடாளுமன்ற தேர்தலுக்காக 10 லட்சம் மின்னணு எந்திரங்கள், வி.வி.பேட்களை தயாரித்து கொடுக்கும்படி தேர்தல் ஆணையம் கேட்டு இருந்தது. அதன்படி, எந்திரங்களை தயாரித்து கொடுத்துள்ளோம்.

2018-19-ம் ஆண்டில் பி.இ.எல்.நிறுவனத்திற்கு ரூ.2,703 கோடி லாபம் கிடைத்துள்ளது. இது கடந்த 2017-18-ம் ஆண்டை விட 17 சதவீதம் அதிகமாகும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மின்னணு எந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு புகார்களை கூறினார்கள். தேர்தல் முடிந்த பின்பு எந்த ஒரு புகார்களும் வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story