மும்பையில் ஏ.சி. மின்சார ரெயில் கட்டணம் உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது


மும்பையில் ஏ.சி. மின்சார ரெயில் கட்டணம் உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது
x
தினத்தந்தி 2 Jun 2019 5:00 AM IST (Updated: 2 Jun 2019 3:59 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் ஏ.சி. மின்சார ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

மும்பை, 

மும்பையில் ஏ.சி. மின்சார ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

கட்டண உயர்வு

மும்பையில் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் விரார்- சர்ச்கேட் இடையே ஏ.சி. மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடத்தில் தினமும் 12 சேவைகள் இயக்கப்படுகின்றன. ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்ட 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த மாதம் வரை அதில் 58 லட்சம் பேர் பயணம் செய்து உள்ளனர்.

இந்தநிலையில் ஏ.சி. ரெயில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஏ.சி. மின்சார ரெயில்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.60-ல் இருந்து ரூ.65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்ச கட்டணம் ரூ.205-ல் இருந்து ரூ.220 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல மாத பாஸ் கட்டணம் ரூ.50 முதல் ரூ.165 வரை அதிகரித்துள்ளது.

நாளை முதல் அமல்

இது குறித்து மேற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏ.சி. ரெயில் கட்டண உயர்வு நாளை(திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது, என்றார்.

இந்தநிலையில் ஏ.சி. கட்டண உயர்வுக்கு பயணிகள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். இது குறித்து ராஜூவ் சிங்கால் என்ற பயணி கூறும்போது, “ஏ.சி. மின்சார ரெயில்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் இயக்கப்படுகின்றன. வார விடுமுறை நாட்களிலும் இயக்கப்படுவதில்லை.

தற்போது கோடைகாலம் என்பதால் பலர் ஏ.சி. மின்சார ரெயிலில் செல்ல விரும்புவார்கள். இந்த நேரத்தில் கட்டணத்தை உயர்த்துவது பயணிகள் ஏ.சி. ரெயிலில் செல்வதை தவிர்க்கும் விதமாக அமையும்” என்றார்.

Next Story