காதலித்த பெண் திருமணத்துக்கு மறுத்ததால் ரெயில் முன் பாய்ந்து போலீஸ்காரர் தற்கொலை 5 பக்க உருக்கமான கடிதம் சிக்கியது
காதலித்த பெண் திருமணத்துக்கு மறுத்ததால் போலீஸ்காரர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த 5 பக்க உருக்கமான கடிதம் சிக்கியது.
மும்பை,
காதலித்த பெண் திருமணத்துக்கு மறுத்ததால் போலீஸ்காரர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த 5 பக்க உருக்கமான கடிதம் சிக்கியது.
அதிவிரைவு படை போலீஸ்காரர்
மும்பை மரோல் போலீஸ் காலனியில் வசித்து வந்தவர் தினேஷ் (வயது29). இவர் தகிசர், அதிவிரைவு படையில் போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களாக கடும் மன உளைச்சலுடன் காணப்பட்டு வந்தார். மேலும் யாரிடமும் பேசாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் போலீஸ்காரர் தினேஷ் தகிசர்-போரிவிலி இடையே தண்டவாளத்தில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். தகவல் அறிந்து வந்த போரிவிலி ரெயில்வே போலீசார், தினேசை மீட்டு அருகில் உள்ள அம்பேத்கர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
தற்கொலை
இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், போலீஸ்காரர் தினேஷ் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர். 5 பக்கம் கொண்ட அந்த கடிதத்தில், அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண் திருமணத்துக்கு மறுத்ததால் தற்கொலை செய்துகொள்வதாகவும் தினேஷ் உருக்கமாக எழுதி இருந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story