இட்லி வியாபாரி கழிவறையில் தண்ணீர் பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு
இட்லி வியாபாரி கழிவறையில் தண்ணீர் பிடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவிபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை,
இட்லி வியாபாரி கழிவறையில் தண்ணீர் பிடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவிபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கழிவறை தண்ணீர்
மும்பை குர்லா ரெயில்நிலையத்தில் வியாபாரி ஒருவர் அசுத்தமான தண்ணீரால் லெமன் ஜூஸ் தயாரிக்கும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து மத்திய ரெயில்வே சுகாதாரமற்ற முறையில் லெமன் ஜூஸ் தயாரித்த கடைக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது.
இந்தநிலையில் இட்லி வியாபாரி ஒருவர் கழிவறையில் ஒரு கேனில் தண்ணீர் பிடித்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ போரிவிலி மேற்கு பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணை
அவர் வாடிக்கையாளர்கள் குடிக்க அந்த தண்ணீரை எடுத்து சென்றாரா? அல்லது கை கழுவுவதற்காக எடுத்து சென்றாரா? என்பது குறித்து அந்த வீடியோவில் தெளிவாக இல்லை. இந்த சம்பவம் குறித்து சிலர் அளித்த புகாரின் பேரில் போரிவிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story